September 13, 2024

சிறீதரனிடம் இப்போது ஆயுதமில்லையாம்?

எங்களுக்கு ஒவ்வொரு தேர்தலும் போர்க்களம். ஆனாலும் எங்களிடம் இப்போது ஆயுதங்கள் இல்லையென தெரிவித்துள்ளார் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்.

கிளிநொச்சியில் தேர்தல் பரப்புரை கூட்டமொன்றில் உரையாற்றியுள்ள அவர்  நாங்கள் ஆயுதப் போராட்டம் நடத்தியவர்கள். எங்களால் முடியும் ஆனால் ஆயுதங்களை இப்போது நாங்கள் தூக்கவில்லை.
ஆயுதப் போராட்டம் பற்றி நாங்கள்  பேசவில்லை அடுத்த சந்ததி துப்பாக்கி தூக்கவேண்டும் என்றும் நாங்கள் சொல்லவில்லை.
நாங்கள் கேட்கின்றோம் இருக்கின்ற இந்தக் காலத்திலே எங்களுக்கான ஒரு நிரந்தர அரசியல் தீர்வை வழங்குவதற்கு சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு எங்களுக்கு மிக அவசியமானது. அதனால்தான் ஒரு பலமான சக்தியாக நாங்கள் பாராளுமன்றத்தில் இருக்கவேண்டிய தேவை இருக்கிறது அந்தப் பலத்தை வாக்கின் ஊடாகத்தான் பெறமுடியும்.
இதனை கடந்த ஆண்டுகளில் நீங்கள் செய்திருக்கின்றீர்கள் .இம்முறை இருக்கிற சிதைவுகளும் பல நெருக்கடிகளூம் எங்கள் மக்களை கொஞ்சம் ஆட்டிப் பார்க்;கிறதெனவும் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.