மறித்த ஆமிக்கு அடி?

கைதடி இராணுவச் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இராணுவ சிப்பாய் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று (19) மதியம் குறித்த சோதனைச் சாவடியில் அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் மறித்துள்ளார்.
இதன்போது அதி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி இராணுவச் சிப்பாய் மீது மோதியுள்ளது. இதனால் இராணுவச் சிப்பாயின் கால் முறிவடைந்துள்ளது. படுகாயமடைந்த இராணுவ சிப்பாய் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்து மோதி இளைஞன் சாவகச்சேரிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.