März 29, 2024

மட்டக்களப்பில் ஆயிரம் விகாரைகள்?

மட்டக்களப்பில் ஆயிரம் விகாரைகள்?

மட்டக்களப்பில் ஆயிரம் விகாரைகளை அமைக்கும் திட்டம் உள்ளதாக பரப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானது என மட்டக்களப்பு மாவட்ட சுயேட்சை வேட்பாளர் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், விகாரை அமைப்பதாயின் தொல்பொருள் திணைக்களத்திற்கு தாமே அனுமதி வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர்,

மட்டக்களப்பில் ஆயிரம் விகாரைகளை அமைக்கப் போவதாக தற்போது வதந்திகள் பரவியுள்ளன.

தேர்தலுக்காக இவ்வாறு கதைகளைப் பரப்பி மக்களின் மூளையை சலவை செய்கின்றனர்.மட்டக்களப்பில் அவ்வாறு விகாரைகள் அமைக்கப்பட மாட்டாது.

நான் மட்டக்களப்பைச் சேர்ந்த தேரர், மட்டக்களப்பில் விகாரை அமைக்கப்படுமாயின, அதனை நானே முதலில் தெரிந்துகொள்வேன். எந்தவொருவர் வந்தாலும் அவ்வளவுதான். தொல்பொருள் பிரிவினர் வந்தாலும் கூட,

விகாரைகளை அமைப்பது தொடர்பில் தேரர்களே தீர்மானிப்பார்கள்.மக்களுக்கு பொய்யுரைக்கின்றனர்.

ஸ்ரீலங்காவில் விகாரைகளை அமைத்தால் அங்கு இருப்பதற்கு தேரர்கள் வேண்டும்.எங்கே தேரர்கள் இருக்கின்றார்கள்?ஸ்ரீலங்காவில் தேரர்கள் இல்லை. குறைந்த எண்ணிக்கையிலான தேரர்களே இருக்கின்றனர்.

அவர்களே தமிழ், சிங்களம் முஸ்லிம் என அனைத்து இன மக்களினதும் சகவாழ்வுக்காக குரல்கொடுக்கின்றனர்.

தமிழ் மற்றும் முஸ்லீம் இளைஞர்கள் என்னுடன் இணைந்துகொள்ளுங்கள். இல்லாவிடின் உங்களின் பிள்ளைகளின் வாழ்க்கை அழிவடைந்துவிடுமென அவர் தெரிவித்துள்ளார்.