April 18, 2024

பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் எடுத்த அதிரடி முடிவு..!!

பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் எடுத்த அதிரடி முடிவு..!!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த 7ஆம் அறிவு எனும் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இதன்பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஆகிய பல மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஸ்ருதி.

இதனை தொடர்ந்து தமிழில் விஜய்யின் புலி, அஜித்தின் வேதாளம், தனுஷின் 3 என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார்.

நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு நடிப்பை தவிர்த்து இசையில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.

ஆம் தான் நடிக்கும் படத்தில் ஒரு பாடல் ஆவது பாடி விடுவார். அது மட்டுமல்ல மற்ற படங்களுக்கும் பின்னணி பாடகியாக இருந்து பாடியும் கொடுத்துள்ளார்.

தற்போது விஜய் சேதுபதியின் லாபம் படத்தில் நடித்து வரும் ஸ்ருதி, அண்மையில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார்.

இதில் பேசிய ஸ்ருதி ஹாசன் : கொரானா ஊரடங்கு சமயத்தில் கவிதை எழுதுவது, கதை எழுதுவது போன்ற வற்றைகளுக்கு நேரத்தை செலவழித்து வருகிறேன். எனக்கு நடிப்பு மற்றும் இசையிலும் மிகவும் ஆர்வம் இருக்கிறது.

நல்ல கதைக்களம் அமைந்தால் நான் கண்டிப்பாக வில்லி கதாபாத்திரங்களில் நடிக்க தயார். சம்பளத்தை பற்றி எனக்கு கவலை கிடையாது. எனக்கு அது முக்கியம் இல்லை. என்று கூறினார்.