September 13, 2024

வாக்குச்சீட்டை மாற்றிய சிறீதரன் அணி?

அடுத்த முறையும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் படாதபாடுபட்டு வருகின்றார்.

அவருக்கான போட்டியாளராக கருதப்படும் சுயேட்சைக்குழு மு.சந்திரகுமார் கேடயம் சின்னத்தில் களமிறங்க அவரை கவிழ்த்துவிட சிறீதரன் மும்முரமாக உள்ளார்.
இந்நிலையில் தமிழரசு அச்சிட்டு வெளியிட்டுள்ள மாதிரி வாக்கு
இன்று கிளிநொச்சியின் பல பிரதேசங்களில் கிளிநொச்சி தமிழரசு கட்சியினரால் விநியோகிக்கப்பட்ட மாதிரி வாக்குச் சீட்டில் சுயேச்சைக் குழு 5 இன் சின்னம் கேடயம் என்று தெரிந்தும் அதனை மாற்றி அன்னத்தை அச்சிட்டு விநியோகித்து வருகின்றனர்.
ஏனைய அனைத்து கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சின்னங்களை சரியாக அச்சிட்டவர்கள் சுயேச்சைக் குழு 5 சின்னத்தை மட்டும் மாற்றியிருக்கின்றனர்.