März 28, 2024

ஈபிடிபியிடம் ” 3 அ”க்கள்!

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக்கட்சி 3 அ திட்டங்களை முன்வைத்து நகர்வுகளை முன்னெடுத்திருப்பதாக தெரிவித்துள்ளார் அக்கட்சியின் முக்கியஸ்தரும் யாழ்.மாவட்டத்திற்கான நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான குலரட்ணம் விக்னேஸ்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை நடைபெற்ற சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் எமது கட்சி நிச்சயம் அமையப்போகும் அரசினில் பங்காளியாக இணைந்து கொள்ளுமெனவும் தெரிவித்தார்.
ஏற்கனவே மகிந்த ராஜபக்ச அமையப்போகும் அமைச்சரவையில் தமிழ் மக்களது பிரதிநிதியாக டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக பொறுப்பேற்பார் என தெரிவித்துள்ளார்.
ஈழமக்கள் ஜனநாயக்கட்சி முன்வைக்கும் 3 அ திட்டங்களில் அரசியல் உரிமை,அபிவிருத்தி,அன்றாட தேவைகள் என்பவையே முன்னிறுத்தப்படும்.
அதனை முன்னிறுத்தியே எமது பிரச்சாரம் இருக்கும்.
ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியில் தற்போது புலமையாளர்களும் இணைந்து அரசியல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய நல்லிணக்கத்தை முன்னிறுத்தி எமது கட்சி அரசியலில் ஈடுபடுவதால் எமது முன்மொழிவுகளை நிராகரிப்பதற்கான சாத்தியங்கள் இல்லாதிருக்கின்றதென சுட்டிக்காட்டிய அவர் மக்கள் எம்மை பெரும்பான்மையாக வாக்களித்து வெல்ல வைக்கவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.