April 18, 2024

நடுவில் கொழுந்து விட்டெரிந்த ஜெட் விமானம்!

நடுவில் கொழுந்து விட்டெரிந்த ஜெட் விமானம்!

மெக்சிகோவிலிருந்து தென் அமெரிக்காவிற்குள் நுழைந்த விமானம் ஒன்றை விமானப்படை துரத்த, பின்னர் அது சாலை ஒன்றின் நடுவில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்ததைக் கண்டுள்ளனர் ராணுவத்தினர்.

அந்த இடத்தை ராணுவம் அலசி ஆராய்ந்தபோது, சற்று தொலைவில் ஒரு ட்ரக்கில் 13 சாக்கு மூட்டைகளில் கொக்கைன் என்னும் போதைப்பொருள் இருப்பதைக் கண்டுள்ளனர்.

850 பவுண்டுகள் எடையுடைய அந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் 4.9 மில்லியன் டொலர்கள் ஆகும்.

போதைப்பொருள் கடத்தும் கும்பல் ஒன்று, ராணுவம் தங்களை துரத்துவதைக் கண்டதும், தப்புவதற்காக போதைப்பொருள் இருக்கும் விமானத்தை கொளுத்திவிட்டு அதிலிருந்தவர்கள் தப்பியிருக்கலாம் என உள்ளூர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளது.

ஆனால், அதிகாரிகள் அந்த செய்தியை உறுதிசெய்யவில்லை.

ஆகவே, விமானம் தரையிறங்கும்போது மோதி வெடித்து தீப்பிடித்ததா, அல்லது கடத்தல்காரர்கள் வேண்டுமென்றே அதை தீவைத்து கொளுத்தினார்களா என்பது தெரியவில்லை.