März 29, 2024

மத்திய கிழக்கு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை..!!

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணத்தில் மத்திய கிழக்கு நாடுகள் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து மத்தியக் கிழக்கு நாடுகளுக்கான உலக சுகாதார அமைப்பின் தலைவர் அகமத் அல் மந்த்ஹாரி கூறும்போது,

மொராக்கோ முதல் பாகிஸ்தான் வரை மொத்தம் 22 நாடுகளில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

24 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். நாம் கொரோனாவுக்கு எதிராக முக்கியமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.

கடந்த நான்கு மாதங்களை விட இப்போது தான் கொரோனா தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது.

கரோனாவால் அதிகமான இறப்புகள் எகிப்து, ஈரான், ஈராக் மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதேவேளை சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. கொரோனா வைரஸால் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

தென் கொரியா, நியூசிலாந்து, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகள் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.