März 28, 2024

பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் நீண்ட நாட்களின் பின் ஒன்றுகூடிய தமிழ் மக்கள்!

பிரான்ஸ் லாச்சப்பல் பகுதியில் நீண்ட நாட்களின் பின் ஒன்றுகூடிய தமிழ் மக்கள்! (வீடியோ)
உலக நாடுகளை முடக்கி, மனித உயிர்களைப் பலியெடுத்து வந்த கொரோனா வைரஸ் தொற்றினால் மனிதர்களின் அன்றாட செயற்பாடுகள் முடங்கியிருந்தது.

இந் நிலையில் பிரான்ஸ் நீண்ட நாள் முடக்கத்தின் பின் தற்போது மெல்ல மெல்ல வழமைக்குத் திரும்பி வருகின்றது.

அந்தவகையில் தமிழர் வர்த்தக மையமான லாச்சப்பல் பகுதியும் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

அதாவது, லாச்சப்பலில் உள்ள கபே பாரத் உணவகத்தின் முன்னால் உள்ள சுற்றுவட்டப் பாதையில் ஞாயிற்றுக்கிழமைகளில் பல தமிழ் உறவுகள் ஒன்றுகூடி பலவிதமான புதினங்களைப் பேசிக் கொள்வதுடன் தமது பொழுதுகளையும் போக்கிக் கொள்வது வழமை.

இந்த வழமை கடந்த பல நாட்களாக இல்லாதிருந்த நிலையில், தற்போது நேற்றைய தினம் அப் பகுதிகளில் தமிழ் மக்கள் மட்டுமன்றி பல இன மக்களும் ஒன்று கூடியதை அவதானிக்கக் கூடியதாகவிருந்தமை குறிப்பிடத்தக்கது.