September 13, 2024

முகநூலில் பிழை கண்டுபிடித்த மாணவனுக்கு 70ஆயிரம் பணப்பரிசு!

சமூக வலைதளமான முகநூலில் ‘ரைட்ஸ் மேனேஜர்’ என்ற பிரிவில் தவறுகள்  இருப்பதாக கடந்த 2017ம் ஆண்டு முதலே விமர்சனம் எழுந்து வருகிறது. இதை முகநூல் நிறுவனம் அவ்வப்போது மேம்படுத்தி வந்தது. இருநதாலும் இது தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து வந்தது.
இந்த நிலையில்,  ரைட்ஸ் மேனேஜர் பிரிவில் உள்ள பிழையை, சென்னை பொறியியல் கல்லூரியில் படித்து வரும்  மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த  டி.கே.கிஷோர்,  ஆதாரப்பூர்வமாக பேஸ்புக் நிறுவனத்துக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.

இதை ஆய்வு செய்த முகநூல் நிறுவனம், கிஷோரின் திறமையை பாராட்டி ரூ.77 ஆயிரம் பரிசு வழங்கி கவுரவித்து உள்ளது.
இதுகுறித்து கூறிய கிஷோர்,  பேஸ்புக் ‘ரைட்ஸ் மேனஜர்’ பிரிவில் உள்ள  ரைட்ஸ் மேனேஜர் ஆப்ஷன் இருக்கும்.  இதை ஆக்டிவேட் செய்ய  பேஸ்புக் மீடியா துறையை தொடர்பு கொண்டு அனுமதி பெற வேண்டும். அனுமதி கிடைத்ததும், நமது ஆடியோ, வீடியோக்களை பேஸ்புக்கில் பதிவேற்ற முடியும், அதற்கான காப்பிரைட் நமக்கு கிடைக்கும்.
ஆனால்,   காப்பி ரைட் செய்த வீடியோ, ஆடியோவை, பலர்  தங்கள் பேஸ்புக் பக்கங்களில் ‘பிரைவேட்’, ‘பப்ளிக்’ என்ற பிரிவில் பதிவேற்றுவது வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர்.

இதுபோன்று பிரைவேட் பிரிவில் பதிவேற்றும் போது, பதிவேற்றிய நபரின் விபரங்களை காப்பி ரைட் பெற்ற வீடியோ, ஆடியோ கிரியேட்டருக்கு பேஸ்புக்  காட்டியது. பொதுவாக பிரைவேட் என்பதே பதிவேற்றியவரின் விபரங்களை காட்டாமல் இருக்கதான்.  ஆனால், பேஸ்புக்கில், அந்த விவரங்கள் தெரிய வந்தது. இது ஒரு தவறான நடவடிக்கை. இதை நான் கண்டுபிடித்து ஆதாரப்பூர்வமாக ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
இதை ஆராய்ந்த் பேஸ்புக் நிறுவனம்,  பிழையை சரி செய்ததுடன் என்னை பாராட்டி ரூ.77 ஆயிரம் பரிசு வழங்கினர் என்று தெரிவித்துள்ளார்.
கிஷோர் ஏற்கனவே   கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பிரபல வலைதளங்களில் உள்ள பிழைகளை கண்டுபிடித்து பரிசு வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.