September 13, 2024

சென்னையில் ஈழத்தமிழர்கள் மீது ஈஎன்டிஎல்எஃப் ஒட்டுக்குழு தாக்குதல்!

தமிழ்நாடு சென்னை , வளசரவாக்கம் பகுதியில் கொரோன தோற்று நேய் காரணமாக இயல்பு நிலை பாதிக்கப்பட்டு அல்லல்படும் ஈழத்தமிழர்களுக்கு புலம்பெயர் தேசத்தில் இருக்கும் உறவுகளில் நிதி பங்களிப்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கிய ஈழத்தமிழர்கள் மீது சிறிலங்கா – இந்தியாவின் துணை இராணுவக் குழுவான பரந்தன் ராஜன்  ஈஎன்டிஎல்எஃப் (ENDLF) கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
வளசரவாக்கம் பகுதியில் வாழ்ந்துவரும்  ரமணன் மற்றும் வாசன் தலைமையிலான   ஈஎன்டிஎல்எஃப் (ENDLF) கும்பலே தாக்குதலை மேற்கொண்டுள்ளது. நிவாரணப் பொருட்கள் தம்மூடாக வழங்க வேண்டும்  என்றும் புலம்பெயர் நாட்டில் இருக்கும் புலிகள் ஊடக பணம் வருகிறது என்று பொய்யான குற்றசாட்டை முன்வைத்து தாக்குதல் நடத்தியது மட்டுமல்லாமல்  நிவாரணப் பொருட்கள் வழங்கிய ஈழத்தமிழர்களின் வாட்ஸஅப் (whatsapp ) எண்களுக்கு எச்சரிக்கை விடும் தொனியில் குரல்பதிவு ஒன்றையும் அனுப்பி உள்ளனர்.
அதே நேரம்  வளசரவாக்கம், பொழிச்சலூர் , அண்ணா நகர் , திருவாண்மையூர்,கே கே நகர்  ஆகிய இடங்களில் வாழ்ந்து வரும் முன்னாள் போராளிகள் மற்றும் மாவீரர் குடும்பங்களும் இவ்வாறான எச்சரிக்கையினை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை, வளசரவாக்கம் R9  காவல் நிலையம் ,  மதுரவாயல் காவல் நிலையம்   ஆகியவற்றில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்க்கொள்ள வில்லை என்பது குறிபிடதக்கது.