September 13, 2024

இலங்கை_அரசு தமிழீழ தமிழீழ_விடுதலைப்புலிகளிடம் வெள்ளநிவாரணம் கோரியது….! என்ற செய்தியை அறிவீர்களா…..?

இலங்கை_அரசு தமிழீழ அரசாங்கமான #தமிழீழ_விடுதலைப்புலிகளிடம் வெள்ளநிவாரணம் கோரியது….!
என்ற செய்தியை அறிவீர்களா…..?
நன்றிகெட்ட சிங்கள மக்கள்..!
உண்மையிலேயே இது நடந்தது 2003ஆம் ஆண்டு மே மாதம் இதே நாட்களில்தான்.
இன்று பாதிப்புக்குள்ளான இதே பிரதேசங்கள்தான் அன்றும் வெள்ளத்தில் மூழ்கின. வரலாறு கண்டிராத பேய் மழை பொழிந்து மிகப்பெரிய மனிதப் பேரவலத்தை இவ்விடங்களில் ஏற்படுத்தியிருந்தது.
அப்போதைய வானிலைத் தரவுகளின்படி #Ganapenigola_Iranganie_Estate எனும் இடத்தில் 899mm மழை வீழ்ச்சி பதிவாகியது.
எட்டு இலட்சம் மக்களை இடம்பெயர வைத்த இந்த பேரனர்த்தம் 260 மக்களின் உயிர்களைக் காவுவாங்கியது.
ஏராளமான பகுதிகள் வெள்ளத்தால் மூடப்பட்டன. 2003 may 17, 18 ஆகிய தினங்களிலேயே இது நிகழ்ந்தது.
அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவி சந்திரிகா சனாதிபதியாக இருக்க பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கியதேசியக் கட்சி ஆட்சியில் விடுதலைப்புலிகளுடனான சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலம் அது.
வெள்ள நிவாரண ஒருங்கிணைப்பாளராக அப்போதைய அமைச்சருமான கரு ஜெயசூரிய அவர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்.
இவ்வாறான சூழ்நிலையில்தான் விடுதலைப்புலிகள் இந்த மக்களுக்கு உதவும் பொருட்டு வெள்ள நிவாரணக் குழு ஒன்றை நியமித்தார்கள்.
இதன்போதுதான் வெள்ள நிவாரண ஒருங்கிணைப்பாளராக இருந்த அப்போதைய அமைச்சர் கரு ஜெயசூரிய விடுதலைப் புலிகளிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தார்.
“இலங்கை அரசாங்கம் எதிர்பாராதளவு இடர்பாடுகளைச் சந்தித்துள்ளது. இப்படியொரு பேரனர்த்தம் நிகழும் என்பதை நாங்கள் நினைத்தும் பார்க்கவில்லை. இங்குள்ள பாதிக்கப்பட்ட மக்கள் தமது முக்கியமான பொருட்கள் பலவற்றை இழந்துள்ளனர்.
அவசரமாகவும் அவசியமாகவும் உலர் உணவுப் பொருட்களும் உடுக்க உடைகளும் தேவைப்படுகின்றன. முடிந்தால் அனுப்பி வைக்கவும்” என்ற கோரிக்கை விடுதலைப் புலிகளிடம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் அன்றைய காலம் வடகிழக்கு தமிழ் மக்கள் போரால் மிகவும் பாதிப்புக்குள்ளாகி இருந்த காலமாகும். அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கேற்ப தென்னிலங்கை மக்களுக்காய் தம்மால் இயன்ற உணவு, உடை போன்றவற்றை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளிடம் கையளித்தனர்.
இவற்றைச் சுமந்துகொண்டு வன்னியிலிருந்து பாரவூர்திகள் தென்னிலங்கை நோக்கிப் பறந்தன.
அப்போதும் நல்லிணக்கம் பற்றிய கதைகள்தான் சென்றுகொண்டிருந்தது.
#Daily_News பத்திரிகையின் ஊடகவியலாளர் #உடித_குமாரசிங்க இதனை வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
இதுவரை இல்லாத ஒரு நல்லிணக்கச் சமிக்கையாக இதை வர்ணித்திருந்தார்.
#An_unprecedented_gesture_signifying_goodwill_and_reconciliation என தலைப்பிட்டு எழுதப்பட்டது. இதை இன்று பலரும் மறந்திருப்பர்…!
ஆனால் அன்றைய நாட்களில் ஒரு நெகிழ்வுமிக்க சம்பவமாக இது பேசப்பட்டது. முக்கியமாக தென்னிலங்கை ஊடகங்களில் பேசப்பட்டது.
போரின் காயங்களிலிருந்து மீண்டெழாத நிலையிலும் சக மனிதர்களுக்காக தமது பங்கில் சரிபாதியை தந்துதவிய வடகிழக்கு தமிழ் மக்களின் மனிதாபிமானம் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்குமான சிறந்த நல்லிணக்க சமிக்கையாக இருக்குமென கூறப்பட்டது.
இந்த விடயத்தில் #ஸ்ரீலங்கா_தமிழீழம் எனும் இரு நாடுகளின் நல்லுறவு பற்றிய பொதுப்பார்வை ஒன்று அப்போது எழுந்திருந்தது…!
அனைத்தும் முறிந்து மஹிந்த ராஜபக்ச சனாதிபதியாக வந்ததன் பிறகு புலிகள் உதவிய-பாதிப்புக்கு உள்ளாகிய இதே பிரதேசங்கள்தான் மஹிந்தவின் மிகப்பெரும் ஆதரவுக் கோட்டைகள் ஆகின.
போர் தொடங்கி தமிழ் மக்களும் விடுதலைப் புலிகளும் அழிக்கப்பட்ட சம்பவத்தை நன்றி மறந்து வெற்றி கொண்டாடியதும் இந்த சிங்கள மக்கள் தாண்…..!!!
மேற்கொண்டு எழுத முடியவில்லை,
ஆனால் நடந்த உண்மைகளைச் சொல்லாமல் கடந்து செல்லவும் முடியவில்லை., அன்று எதிர்பார்க்கப்பட்ட நல்லிணக்கத்தை இன்றும் எதிர்பார்ப்போடு நம்பிக்கொண்டுதான் இருக்கிறோம்…!
2
Like
Comment
Comments