September 13, 2024

இலங்கை:கடற்படையிலிருந்து தரைப்படைக்கு?

இலங்கை கடற்படையினை ஆக்கிரமித்துள்ள கொரோனா தற்போது இலங்கை இராணுவத்தை இலக்கு வைக்க தொடங்கியுள்ளது.

இதனிடையே குவைத்திலிருந்து நாடு திரும்பியவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்தியந்தமையாலேயே இராணுவ வீரருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடமையாற்றி வந்ததுடன் அங்கிருந்து வந்தவர்களுக்கு இந்த இராணுவ வீரர் உதவிகளை மேற்கொண்டுள்ளார் என தெரிவித்தார். இந்நிலையில் இராணுவ வீரர் கடந்த 26 ஆம் திகதி விடுமுறையில் ஹொரணையில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.
தற்போது கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஹொரன நகரில் 4 வர்த்தக நிpலையங்களில் பணியாற்றிய 26 பேர் தனிமைப்படுத்ப்பட்டுள்ளனர்.
குவைத்திலிருந்து திரும்பிய இலங்கையர்களில் பெரும்பாலானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்;று நடத்தப்பட்ட 61 பேருக்கான கொரோனா பரிசோதனையில் இருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கின்றனர்.
61 பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.