März 28, 2024

வடமாகாணசபை: கலைத்துப்பிடித்து விளையாட்டு?

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவனால் நிறுத்தப்பட்ட வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவிற்கு மீண்டும் அதே உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதனை புதிய ஆளுநர் எம்.சார்ள்ஸ் உறுதிப்படுத்தி கடிதம் அனுப்பி வைத்துள்ளதுடன் வெற்றிடமாகவுள்ள இடங்களிற்கு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவரெனவும் உறுதியளித்துள்ளார்.
வடக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினை முன்னைய ஆளுநர் சுரேன் ராகவன் கலைத்திருந்ததுடன் தனது விசுவாசிகளை கொண்டு புதிய குழுவை நியமிக்க முற்பட்டிருந்தார்.
இவ்வாறு கலைக்கப்பட்ட குழுவின் தலைவராக முன்னாள் அரச அதிபர் பத்மநாதன் ,ஓய்வு பெற்ற உள்ளுராட்சி ஆணையாளர் இராசையா , இராசநாயகம் போன்றோரினால் ஆணைக் குழு ஒன்றை கலைப்பதற்குரிய முறைமை பின்பற்றப்படவில்லை தெரிவித்து கடந்த ஆண்டின் யூலை மாதம் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.இருப்பினும் ஐந்து அங்கத்தவர்களில. இருவர் தாமாகவே விலகிகொண்டனர்.
இந்த நிலையில் தற்போது குறித்த வழக்கினை தாக்கல் செய்தவர்கள் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வழக்கினை மீளப்பெற்ற நிலையில் தற்போதைய ஆளுநர் முன்னாள் அரச அதிபர் பத்மநாதன் ,ஓய்வு பெற்ற உள்ளுராட்சி ஆணையாளர் இராசையா , இராசநாயகம் ஆகிய மூன்று உறுப்பினர்களினையும் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.