April 19, 2024

பணச்சுருட்டல் சர்ச்சையில் முன்னணி சட்டத்தரணி!

ஆட்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரொருவரிடமிருந்து நீதிமன்ற நிபந்தனையினை திரிபுபடுத்திய முன்னணி சட்டத்தரணி விவகாரம் யாழில் பேசுபொருளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில சட்டத்தரணிகள் தவிர்த்து கணிசமான சட்டத்தரணிகள் வீட்டில் மாலை வேளைகளில் ஆவா குழு அங்கத்தவர்கள் உள்ளுர் கொள்ளையர்களை என மக்கள் விரோத கும்பல்களை காண்பது சுலபமானதொன்றாகும்.அத்துடன் அது சாதாரணமானதும் கூட.
அவர்கள் தமது வாடிக்கையாளர்கள் என சொல்லிக்கொண்டாலும் கொள்ளையில் இத்தனை வீதமென பிணையில் எடுத்து விட கட்டணமென பேரம் பேசுவது வழமையானதொன்று.
இப்பேரங்களிற்காக புதிய கொள்ளைகளை அரங்கேற்றி பணம் செலுத்திய கொள்ளையர்கள் மற்றும் ஆவா குழுவினர் பற்றியும் கதைகள் உண்டு.
பகிரங்கமாக கொலை செய்த கட்சி முக்கியஸ்தர் ஒருவரை பிணையில் எடுத்துவிட கவனிக்கவேண்டியவர்கள் பட்டியல் வாசித்து 25 இலட்சம் பெற்ற சட்டத்தரணிகள் கூட யாழில் உள்ளனர்.
கணிசமான சட்டத்தரணிகள் நீதிமன்றில் படியேறி விடயத்தை தீர்ப்பதை விட தமிழக பாணியில் காவல்நிலையத்திலேயே பிரச்சினைகளை தீர்த்து விடுவதும் இப்போது சாதாரணமாகியிருக்கின்றது.
வெளியே பெண்ணியம்,புரட்சி கதைத்து தனது ஜீனியருடன் குடும்பமான கதைகளும் இருந்து விடுகின்றது.
தன்னிடம் பிணை கோரி சட்டரீதியாக வாதிட்டு பிணை பெற்றவர்களை விட  சந்தேக நபர்களது குடும்ப சூழலை சொல்லி பிணை கேட்ட சட்டத்தரணிகளே அதிகமென்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதியொருவர்.
இந்நிலையிலேயே முன்னணி சட்டத்தரணி ஒருவர் மல்லாகம் நீதிமன்றில் ஜம்பதினாயிரம் பெறுமதியான ஆட்பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்த சந்தேக நபரிடம் நீதிமன்றிற்கு செலுத்து வேண்டுமென 50ஆயிரம் பணம் பெற்று சுருட்டிக்கொண்டமை அம்பலமாகியுள்ளது.
இதற்கு முன்னரும் இவ்வாறு பல சந்தரப்பங்களில் சுருட்டப்பட்ட தகவல்கள் தன்னிடமுள்ளதாக நீதிமன்ற செய்திகளை அறிக்கையிடும் பெயர் சொல்ல விரும்பாத ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இக்கதையினை பற்றி வாயே திறக்க சட்டத்தரணிகள் சங்கம் மறுத்துவருகின்றது.
மூச்சு விடாமல் முழங்கி தள்ளிவிட்டு அப்பாவிகளிடம் சுருட்டிக்கொள்வது நியாயமாவென  நெட்டிசன்கள் கிறுக்கி தள்ளுவது தொடர்கின்றது.