April 20, 2024

கத்தியின்றி யுத்தமின்றி ஒரு இலட்சம் அமெரிக்கர்களை சீனா கொன்றுவிட்டது – டொனால்ட் ரம்ப்

உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக உறவை துண்டிக்கிறோம். – அமெரிக்க அதிபர் டிரம்ப்…!

கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய சமயத்தில் இருந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் உலக சுகாதார மையம் மீது புகார் அளித்து வந்தார். அமெரிக்கா அதிபர் டிரம்ப் தொடர்ந்து உலக சுகாதார மையத்தை பல்வேறு மேடைகளில் விமர்சனம் செய்து வருகிறார்.

கடந்த மாதமே உலக சுகாதார மையத்தின் நிதியை நிறுத்த போவதாக கூறிய டிரம்ப் இன்றும் அந்த அமைப்பிற்கு எதிராக கடுமையாக பேசினார். கொரோனா வைரஸ் பரவலை உலக சுகாதார மையம் தடுக்க தவறிவிட்டது என்று டிரம்ப் கூறி உள்ளார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று தனது பேச்சில், கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல லட்சம் பேரை கொன்று இருக்கிறது. இந்த வைரஸ் காரணமாக பலர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உலக சுகாதார மையமும், சீனாவும் சேர்ந்து கொண்டு இதில் நாடகம் ஆடியுள்ளது. வுஹன் வைரஸ் பரவல் குறித்து சீனா மற்றும் உலக சுகாதர மையம் இரண்டும் முக்கிய விஷயங்களை மறைத்துவிட்டது.

உலக சுகாதார மையத்திற்கு நாங்கள் பல கோடிகளை அள்ளிக்கொடுத்தோம். ஆனால் உலக சுகாதார மையம் சீனாவின் கைப்பாவை போல செயல்பட்டது. நாங்கள் 450 மில்லியன் டாலர் செலுத்தினோம். ஆனால் சீனா வெறும் 40 மில்லியன் டாலர் செலுத்தி உலக சுகாதார மையத்தை கட்டுப்படுத்தி வருகிறது. நாங்கள் வைத்த கோரிக்கை எதையும் சீனாவோ, உலக சுகாதார மையமோ கேட்கவில்லை.

நான் சீனாவில் இருந்து வரும் விமானங்களை தடை செய்ததன் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது. ஆனால் இதை கூட தொடக்கத்தில் உலக சுகாதார மையம் எதிர்த்தது. தொடக்க காலத்தில் இருந்து இப்போது வரை உலக சுகாதார மையம் இதில் சரியாக செயல்படவில்லை. சீனாவை தொடர்ந்து உலக சுகாதார மையம் ஆதரித்து வந்தது.

கொரோனா வைரஸ் குறித்த உண்மைகளை உலக சுகாதார மையம் மறைத்துவிட்டது. இதன் மூலம் இதன் பாதிப்பை உலக சுகாதார மையம் மறைத்தது. உலக நாடுகளுக்கு கொரோனா பரவுவதை சீனாவும், உலக சுகாதார மையமும் நினைத்து இருந்தால் தடுத்து இருக்கலாம். ஆனால் அதை உலக சுகாதார மையம் செய்யவில்லை.

இதனால் நாங்கள் உலக சுகாதார மையத்துடன் மொத்தமாக நாங்கள் உறவை துண்டிக்கிறோம். இதனால் அவர்களுக்கு இனி நாங்கள் நிதி வழங்க மாட்டோம். உலக சுகாதார மையத்திற்கு வழங்கப்படும் நிதியை நாங்கள் அப்படியே வேறு நாடுகளில், அமைக்களில் சுகாதார தேவைக்காக பயன்படுத்த போகிறோம்., என்று தெரிவித்துள்ளார். இதனால் உலக அளவில் பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.