April 19, 2024

முகமாலையில் வீரவரலாற்றின் சின்னம்!

முகமாலை முன்னரங்க போர் அரங்க பகுதியில் மீட்கப்பட்ட மனித வன்கூட்டு தொகுதி எச்சங்கள் தீச்சுவாலை முறியடிப்புச் சமர் வெற்றி கொள்ளப்பட்ட போது மரணித்த போராளிகளினதென அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய தலைவரது புகைப்படத்துடன்,முகமாலையில் இன்று இடம்பெற்ற அகழ்வு பணியின் போது பெண் போராளி ஒருவரது மனித வன்கூட்டு எச்சங்களும், துப்பாக்கிகள் மூன்றும்,மீட்கப்பட்டுள்ளது.
நாளைய தினமும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த வாரம் மனிதநேய கண்ணிவெடியகற்றல் பிரிவினரது கண்ணிவெடியகற்றல் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட மனித வன்கூட்டு எச்சங்களையடுத்து இன்று ஆய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
2001 ம் ஆண்டின் ஏப்ரல் 25ம் திகதி கிளாலி தொடக்கம் நாகர்கோவில் கண்டல் கரை வரைக்கும் 8 கிலோமீட்டர் நிலப்பரப்பில் மோதல்கள் மூண்டிருந்தது.
சுமார் இலங்கை படைகள் 12 ஆயிரம் பேர் இந்த சமர்களத்தில் பங்கேற்றிருந்தினர். 72 மணிநேர யுத்தம் லெப்டினன் கேணல் சுதந்திரா உட்பட 141 போராளிகளின் உயிரை இழந்ததாக களத்திலிருந்து முன்னாள் போராளியொருவர் தெரிவித்துள்ளார்.
இராணுவம் உடைத்த அத்தனை முன்னரங்க அரண்களும் மகளிர் படையணியின் காப்பரண்கள்.ஒரு அடிகூட அத்தனை பெண் வீரர்களும் பின்னோக்கி வரவில்லை பெண்களின் உடலை கடந்து தான் இராணுவம் உள்ளே வந்தது.
இறுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினரை இழந்து அரச படைகள் பின் வாங்கியது.அந்த 72 மணி நேர வீரவரலாறு அது தான் இன்றைய எச்சங்கள் எனவும் முன்னாள் போராளி தகவல் வெளியிட்டுள்ளார்.