‘கார்த்திக் டயல் செய்த எண்’ – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் கௌதம் வாசுதேவ் மேனன்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, திரிஷா நடித்த படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’.

இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் மீண்டும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் சிம்பு திரிஷாவை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார்.

‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படம் தற்போது இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அதேநேரம் 10 வருடங்களாக காதல் திரப்படமாக இருந்த விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படத்தை 10 நிமிடங்களில் கள்ளக்காதல் ஆக்கிவிட்டீர்களே என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், இதுகுறித்து இயக்குனர் கெளதம் மேனன் கூறும்போது ‘நீ எனக்கு மூன்றாவது குழந்தை என்ற டயலாக்கை சொல்லும் போதே சிம்பு சொல்லிவிட்டார். இது போன்ற மீம்ஸ்கள் வரும் என்று. அதேபோல் இது கள்ளக்காதல்னு நெனச்சா, இது கள்ளக்காதல் தான். ஆனால் எனக்கு அப்படி இல்ல. இது அவங்க அவங்க பார்க்கிற பார்வையில் தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.