September 13, 2024

தொடரும் போராட்டம்:அதிகரிக்கின்றது அதிகாரம்?

வவுனியாவில் இன்றுடன் 1192வது நாளாக  தாய்மாரின் ஒரு நாளைக்கு ஒரு நேர உணவுத்தவிர்ப்பு போராட்டம் தொடர்கிறது.
இதனிடையே ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் எதாவது தரப்பினரால் கூட்டங்கள் நடத்துவதற்காக அறிவிக்கப்பட்டால் அவற்றில் கலந்து கொள்ள வேண்டாம் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்னொருபுறம் ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவித்தலை அடுத்து பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைப்பின் கீழ் காணப்பட்ட ஆறு நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
பல்நோக்கு அபிவிருத்தி செயலணி, மிலோடா நிறுவகம், இரசாயன ஆயுதங்கள் குறித்த பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகார சபை மற்றும் தேசிய பொலிஸ் பயிற்சி கல்லூரி ஆகிய அமைப்புகளே பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.