April 18, 2024

தேர்தல் இரத்து:புதிதாக வேட்புமனு கோர முயற்சி!

இலங்கை நாடாளுமன்ற தேர்தலிற்கான புதிய வேட்புமனுவை கோர கோத்தபாய தரப்பு தயாராகிவருகின்றது.
முன்னதாக தீர்மானித்தவாறு எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்த கூடிய சூழல் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழு, உயர் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

ஜூன் மாதம் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்த வர்த்தமானிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்றில் கடந்த மூன்று நாள்களாக இடம்பெற்று வருகின்றது.
இந்த நிலையில், நாட்டின் தற்போதைய நிலையில், குறித்த திகதியில் தேர்தலை நடாத்த முடியாதென தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் மேலும் 3 மாதங்களிற்கு தேர்தல் சாத்தியமில்லையென தெரியவந்துள்ளது.
அதனாலேயே தேர்தல் அறிவிப்பினை இரத்து செய்து புதிதாக வேட்புமனுக்களை கோர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.