April 20, 2024

ஒன்பது மில்லியன் மக்களின் தகவல்களை திருடிய சீன ஹேக்கர்கள்

சீனாவை சேர்ந்த ஹேக்கர்களால் மிகப்பெரிய அளவில் பயனர் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதாவது EasyJet எனப்படும் விமானப்போக்குவரத்து சேவையினை வழங்கும் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களது தகவல்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் முகவரிகள் உட்பட அவர்களின் பயணங்கள் தொடர்பான விபரங்கள் அனைத்தும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் இவர்கள் பல்வேறு விமான சேவை வழங்கும் நிறுவனங்களினை இலக்கு வைத்து இவ்வாறு செயற்பட்டிருந்ததாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் உலக அளவில் அதிகரித்துக்கொண்டிருந்த சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஹேக்கிங் ஆனது பல்வேறு சந்தேகங்களை உருவாக்கியுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிப்பதற்கு EasyJet நிறுவனத்தின் பேச்சாளர் மறுப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.