April 19, 2024

வடக்கு ஊடாக நகரவுள்ள அம்பான் சூறாவளி..!!

வடக்கு ஊடாக நகரவுள்ள அம்பான் சூறாவளி..!!

அம்பான் சூறாவளி வடக்கு, வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

திருகோணமலைக்கு அப்பால் மையம் கொண்டுள்ள அம்பான் சூறாவளி நாளை பிற்பகல் வடக்கு, வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும் என வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அம்பான் சூறாவளி திருகோணமலைக்கு அப்பால் 900 கிலோமீற்றர் தொலைவில் நேற்று இரவு 11.30க்கு மையம் கொண்டுள்ளது.

இது நாளை 20ஆம் திகதி பிற்பகல் வேளையில் வடக்கு, வடகிழக்கு கரையின் ஊடாக மேற்கு வங்காள கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும். மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

தென்,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும். வட மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிவித்துள்ளது.