März 28, 2024

காலை7 மணிக்கு வீடுகள் தோறும் மே18 நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் நாள் நடைமுறைகள் பற்றி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிவிப்பினை விடுத்துள்ளது.
சிங்கள-பௌத்த அரசினால் முள்ளிவாய்க்காலில் திட்டமிட்டு தமிழினம் வயது வேறுபாடன்றி, பால் பாகுபாடின்றி துடி துடிக்கக் கொல்லப்பட்ட 11ஆம் ஆண்டு நிறைவு எதிர்வரும் 18.05.2020 திகதி  முள்ளிவாய்க்கால் நின்னைவேந்தல் மைதானத்தில் உணர்வெழுச்சியுடன் முற்பகல் 10:30 மணிக்கு நினைவுகூரப்படும் .     இது ஓர் தேசிய நினைவெழுச்சி நாள், உட்பூசல்களைத் தவிர்த்து தமிழ்த்தேசியத்தால் ஒன்று௯டும் நாள். கொத்துக்கொத்தாய் கொல்லப்பட்ட எம்உறவுகளுக்காய் நீதி வேண்டிய பயணத்தில் தமிழராய் ஒன்றிணையும் நாள்.
அன்றய தினம் பிற்பகல் 7 மணிக்கு அனைத்து வணக்கத்தலங்களிலும் விசேட  மணி ஒலி எழுப்பி இப்பேரவலத்தை நினைவேந்துமாறும் அச்சந்தர்ப்பத்தில் வீடுகளில் தீபங்கள் ஏற்றி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு௯ருமாறும்  முள்ளிவாய்க்கால் பேரவல நிலமையை நினைவுபடுத்தும் வகையில் அன்றய தினம் கஞ்சி தயாரித்து பகிர்ந்து கொள்ளுமாறும் தமிழ் மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்வதாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது.