April 20, 2024

வீதிக்கு வரவேண்டாமென்கிறது ஆமி?

இலங்கை அரசோ ஊரடங்கை தளர்த்த இராணுவமோ மக்களை வீதிகளிற்கு வரவேண்டாமென கோரி வருகின்றது.
யாழ். மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் மக்கள் கூட்டமாக வீதிகளில் நடமாடுவதை நாம் விரும்பவில்லை என யாழ். மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக நாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தபோது மக்கள் பட்ட இன்னல்களை நாமறிவோம்.இலங்கையில் மட்டுமல்ல முழு உலக நாடுகளிலும் இந்த ஊரடங்கு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது.
எனினும், எமது ஜனாதிபதி இந்த நிலைமையை கொஞ்சம் கொஞ்சமாக விலக்கி மக்களை இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில்தான் இந்த ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் கூட்டமாக வீதிகளில் இறங்குவதை நாங்கள் விரும்பவில்லை. தேவையானவர்கள் மாத்திரமே வீதிக்கு வாருங்கள். தேவையில்லாது வீதிகளில் பயணிக்காது தனித்திருத்தல் உங்களுக்கும் நல்லது உங்களுடைய சமூகத்துக்கும் நல்லது.எனவே, மக்கள் இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும் என விளக்கமளித்துள்ளார்.