April 24, 2024

கட்டுப்பாடுகளை தளர்தியதும் ஜெர்மனியில் கொரோனா தொற்று 1.1ஆக அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் கவலை!!

ஜெர்மனி  கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் பின்னர் கொரோனா வைரஸ் இனப்பெருக்கம் விகிதம் 1.1 ஆக உயர்ந்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர் .

ஜெர்மனியின் தொற்றுநோய்களின் மேற்பார்வையாளரான பெர்லினில் உள்ள  Robert Koch Institute  கூற்றின்படி.

கடந்த புதன்கிழமை, அதிபர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் மாநில பிரதமர்கள் சமூக தூரத்தை எளிதாக்குவதோடு முகமூடிகளை அணிவதையும் கட்டாயம் என அறிவித்தபோது, ​​விகிதம் 0.65 ஆக இருந்தது.

அனால் சனிக்கிழமையின் எண்ணிக்கை ஒரு நோயாளி குறைந்தபட்சம் இன்னொருவருக்கு தொற்றியுள்ளதென்பதாகும் என்பதாகும். இந்த உயர்வு „அடுத்த நாட்களில் வளர்ச்சியை மிகவும் கவனமாகப் பார்க்க வேண்டியது அவசியம்“ என்று கூறிய Robert Koch Institute சனிக்கிழமையன்று கொரோன தொடர்பான ஒட்டுமொத்த புள்ளிவிவரங்கள் வெளியிட்டதன்படி யேர்மனியில்  169,551 நோய்த்தொற்றுகள் (வெள்ளிக்கிழமை விட 1,251 அதிகம்), மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து 7,369 இறப்புகள் மற்றும் 143,300 பேர் மீட்கப்பட்டதாக அறிவித்துள்ளனர்.