März 29, 2024

சட்டத்திலுள்ள படி முடிவெடுக்க சொல்கிறார் சட்டமா அதிபர்?

மார்ச் மாதத்தில் பொது விடுமுறை நாட்களில் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து சட்டத்தில் உள்ளதன் படி முடிவெடுக்க சட்டமா அதிபர் ஆலோசனைன வழங்கியுள்ளார்.
வேட்பு மனுக்களின் செல்லுபடித் தன்மை குறித்து தற்போது சர்ச்சை எழுந்துள்ள நிலையில் எதிர்வரும் 12 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழு மீண்டும் கூடி கலந்துரையாடவுள்ளது.
ஒரு அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதி எழுப்பிய சந்தேகங்கள் பின்னரே சட்டமா அதிபரின் கருத்தை நாட ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுக்க பொது நிர்வாக அமைச்சர், விசேட வர்த்தமானி அறிவிப்பில், 17, 18, மற்றும் மார்ச் 19 ஆகிய மூன்று நாட்களை விசேட பொது விடுமுறைகள் என அறிவித்திருந்தார்.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மீறல் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் ஜூன் 20 ம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவிப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும், வர்த்தமானி அறிவிப்பை செல்லாது என்றும் உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டிருந்த நிலையில் சட்டத்திலுள்ள படி முடிவை எடுக்க அவர் அலோசனை தெரிவித்துள்ளார்.