März 28, 2024

கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் மீளுவது கடினம்?

உலக புகழ் பெற்ற பொருளியல் சஞ்சிகையான “The Economist” கோவிட் -19 தொற்றுநோயால் மிக மோசமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட வளர்ந்து வரும் நாடுகளை (Developing Countries) அடையப்படுத்தி இருக்கிறது
இந்த “The Economist” சஞ்சிகையின் மதிப்பீட்டின் படி கோவிட் -19 தொற்றுநோயால் மிகப்பெரிய பொருளாதார அழிவை எதிர்கொள்ளும் முதன்மையான நாடுகளில் ஒன்றாக இலங்கை தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அங்கோலா, லெபனான், பஹரைன் , சாம்பியா , மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளும் இலங்கையை போல மோசமான பொருளதார நெருக்கடிகளை எதிர்கொள்ளும் /கொள்ளப்போகும் நாடுகளாக கணிக்கப்பட்டு இருக்கின்றன.
 
வளர்ந்து வரும் 66 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆய்வில் நாடுகளின் Public Debt (பொதுக் கடன்), Foreign Debt (வெளிநாட்டுக் கடன்) மற்றும் Borrowing Costs of Countries(நாடுகளின் கடன் செலவுகள்) ஆகிய குறிக்கட்டிகள ஆய்வின் அடிப்படையாக உபயோகிக்கப்பட்டு இருக்கின்றன
ராஜபக்சே குடும்பம் Hiru , Denera ஊடக வலையமைப்புககளை பயன்படுத்தி பரப்பும் பொய் செய்திகள், முஸ்லீம் சமூகத்திற்கு எதிரான இனவாதம் , இராணுவமயமாக்கல் மூலம் பொது தேர்தலை வென்று விட முடியும்
ஆனால் தவறான தீர்மானங்கள் , அரசியல் , தனிப்பட்ட இலக்குகளால் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியாது என அவதானிகள் தெரிவத்துள்ளனர்.