April 24, 2024

தங்கை இசைப்பிரியா..

தங்கை இசைப்பிரியா..
நான் முதல் முறை தமிழீழம் சென்றபோது இசைப்பிரியாவை பார்த்திருந்தாலும் அதிகம் பேசமுடியவில்லை. மறுமுறை தமிழீழத்தில் ஓவியக் காட்சி நடைபெற்றபோதும் அதற்கு அடுத்தடுத்த பயணங்களிலும் மாதக் கணக்கில் நின்ற காரணத்தால் அவரோடு அதிகமாக பழகுவதற்கும் பேசுவதற்கும் முடிந்தது. இம்முறை சென்றபோது நிதர்சனப் பிரிவு தமிழீழத் தேசியத் தொலைக்கட்சியாக பரிணாமம் பெற்றிருந்தது. கிடைக்கின்ற ஓய்வு நேரங்களில் சந்திப்புகளை வைத்துகொள்வேன். ஆனால் பெரும்பாலும் தினந்தோறும் தமிழீழத் தொலைக்காட்சிக்கு சென்று விடுவேன். அங்கு அனைவருமே எனக்கு நெருக்கமானவர்கள். பிரியமானவர்கள். அவ்வாறு பிரியமானவர்களுள் ஒருவர்தான் தங்கை இசைப்பிரியா. அப்பொழுது தேசியத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுப் பொறுப்பாளராக இசைப்பிரியா கடமையாற்றினார். என்னைப் பார்த்ததுமே இன்முகத்தோடும் புன்சிரிப்போடும் ‚வணக்கம் அண்ணா‘ என்பார். அன்போடு நலம் விசாரிப்பார். எப்போதும் சிரித்த முகத்துடனும் உள்ளத் தூய்மையுடனும் பழகுவார். அகத்தின் அழகு முகத்தில் தெரியும். தொலைகாட்சி என்றாலும் பெரும்பாலும் புலி சீருடையிலேயே இருப்பார்.
அடுத்து வெளிவர இருக்கும் என் நூலில்…
ஒளிப்படம்: போராளி கஜானி