April 25, 2024

கோத்தா – சஜித் கொரோனா குறித்த்து கலந்துரையாடல்

கொரோனா வைரஸ் பரவலுடன் நாட்டில் உருவாகியுள்ள நிலைமை குறித்து அரசாங்கத்திற்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இன்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்காலத்தில் திட்டமிட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து ஜனாதிபதி இதன்போது விரிவாக விளக்கினார். மேலும்,

‚கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது முதல் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு முடியுமானது. சுகாதாரத் துறை, பாதுகாப்புத் துறை உள்ளிட்ட அரச மற்றும் தனியார் பொறிமுறைகளுடன் நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரம் எப்போதும் செயற்பட்டதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகள், அவர்களுடன் பழகியவர்களை இனம்கண்டு வைத்திய நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் பரிசோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டது. அதன் மூலம் தொற்றுக்குள்ளானவர்களை ஏலவே அறிந்துகொள்வதற்கு முடியுமாக இருந்ததாகவும்‘ ஜனாதிபதி தெரிவித்தார்.

இங்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளுக்கு ஜக்கிய மக்கள் சக்தியினர் தமது பாராட்டுக்களை தெரிவித்ததுடன், அரசியல் மற்றும் வேறு பேதங்களின்றி நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று இரு தரப்பினரும் கருத்துத் தெரிவித்தனர்.

அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டங்களில் எவருக்கேனும் அநீதிகள் அல்லது குறைபாடுகள் ஏற்பட்டிருக்குமானால் அது தொடர்பில் உடனடியாக செயற்படுவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாளாந்த சம்பள அடிப்படையில் நிர்மாணத் துறை உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்வதற்காக வருகை தந்து கிராமங்களுக்கு செல்ல முடியாதிருக்கின்றவர்களுக்கு குறித்த தொழில் வழங்குனர்களுக்கு கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் கேட்டுக்கொண்டனர்.