April 18, 2024

கொரோனா அச்சுறுத்தல் விலகியது: சாதாரண நிலைக்கு திரும்பும் முதல் ஐரோப்பிய நாடு

கொரோனா அச்சுறுத்தல் படிப்படியாக விலகி வரும் நிலையில், ஆஸ்திரியா ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னர் சாதாரண நிலைக்கு திரும்பும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் திங்களன்று தலைநகர் வியன்னாவில் பேசிய சேன்ஸலர் Sebastian Kurz, ஏப்ரல் 14 முதல் சிறு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவைகளை திறந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றார்.

மே மாதம் 1 ஆம் திகதி முதல் அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் முடி திருத்தும் கடைகளும் செயல்பட அனுமதிக்கப்படும் என்றார்.

ஆனால் கடும்போக்கான இந்த நடவடிக்கைகள் உரிய பலனை அளித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

திங்களன்று பகல் வெளியான தகவலின் அடிப்படையில் ஆஸ்திரியாவில் கொரோனாவுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 12,008.

இது 100,000 பொதுமக்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 136 என்ற நிலையில் உள்ளது. மட்டுமின்றி பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது 2 சதவீதத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.