April 24, 2024

இந்த இடத்தில் தாக்கினால் கொரோனா வைரஸை வீழ்த்தலாம்… அமெரிக்க……..

கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, கொரோனா வைரஸின் உடலில், மருந்துகளால் எளிதில் தாக்கப்படுவதற்கேற்ற ஒரு குறிப்பிட்ட பகுதியை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

SARS நோயால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளி ஒருவரின் உடலை ஆராய்ந்த அறிவியலாளர்கள், அவரது உடல் SARS நோய்க்கு எதிராக உருவாக்கியிருந்த ஒரு ஆன்டிபாடியை ட்ராக் செய்தபோது, அது SARS வைரஸின் ஒரு குறிப்பிட்ட பகுதி வழியாக உள்நுழைவதைக் கண்டறிந்தனர்.

அதேபோல் அந்த ஆன்டிபாடி கொரோனா வைரஸ் உடலில் எந்த பகுதியில் சென்றமர்கிறது என்பதையும் அந்த அறிவியலாளர்கள் கண்டறிந்தார்கள்.

SARS கிருமி மீது சென்றமர்ந்ததுபோல் வலிமையாக அந்த ஆன்டிபாடி கொரோனா வைரஸ் மீது அமரவிட்டாலும், எந்த பகுதி கொரோனா வைரஸின் உடலில் வலிமையற்றதாக இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க அது உதவியது.

இந்த கண்டுபிடிப்பு, கொரோனா வைரஸின் உடலில் எந்த பகுதியை மருந்துகள் கொண்டு தாக்கலாம் என்பதை அறிய உதவியுள்ளது.

அந்த பகுதிதான் கொரோனா வைரஸின் ’வீக் பாய்ண்ட்’ என்று கூறலாம் என்கிறார் Dr Ian Wilson என்ற ஆய்வாளர்.

இந்த கண்டுபிடிப்பு, கொரோனா வைரஸின் உடல் அமைப்பைக் கண்டுபிடிக்கவும் உதவியுள்ளதால், அதன் மூலம், கொரோனாவுக்கான தடுப்பூசியை வடிவமைக்கவும் அது உதவும் என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.