Januar 31, 2023

வவுனியா மக்களை சந்தித்த ரணில்..!! தெவித்தது இதுதான்!

வவுனியா மக்களை சந்தித்த ரணில்..!! தெவித்தது இதுதான்!

நல்லிணக்கம் ஊடாக அபிவிருத்தியை நோக்கி செல்லும் பயணத்தை துரிதப்படுத்துவதற்காக சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் இன்று (02) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பிரதமர் இதனை தெரிவித்திருந்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வலிமையும் அர்ப்பணிப்பும் கொண்ட ஒரே கட்சி ஐக்கிய தேசிய கட்சி என தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ​போன்று மொனராகலை மாவட்டத்திலும் மந்தமான அபிவிருத்தி காணப்படுவதால் குறித்த பிரதேசங்களின் அபிவிருத்தியை விரைவு படுவத்துவதற்காக சர்வதேச சமூகத்தின் சிறப்பு ஆதரவைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.

வடக்கில் சர்வதேச விமான நிலையம் ஒன்றை சமீபத்தில் திறந்து வைத்ததாக தெரிவித்த பிரதமர், அதன் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுற்றுலா, ஹோட்டல் மற்றும் ஏனைய துறைகள் அபிவிருத்தி அடைவதாக தெரிவித்தார்.

இதன் ஊடாக வடக்கில் பாரிய முதலீடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த அவர், பாரிளவில் வேலைவாய்ப்புகளும் உருவாகும் என தெரிவித்தார்.

மன்னார், பூநகரி மற்றும் வடமராச்சி பிரதேசங்களில் புதிதாக பொருளாதார வலயங்களை நிறுவ திட்டமிட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.

அதேபோல், திருகோணமலை மாவட்டத்திற்கு உரிய நிலாவெளியில் இருந்து வட மாகாணம் வரையான கடற்கரை அபிவிருத்தி செய்யப்படும் என பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

இவை அனைத்தும் இடம்பெறும் போது வவுனியா குறித்த அபிவிருத்தியின் கேந்திர நிலையமாக மாற்றப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வருமான மட்டத்தை அதிகரிக்க நாம் எதிர்ப்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.