Januar 27, 2023

யாழிலிருந்து மலேசியாவிற்கு நேரடி விமானம்?

யாழ்.விமானநிலையத்திற்கு மலேசியாவிலிருந்து நேரடி விமான சேவையினை நடத்துவது தொடர்பில் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் மலேசிய விமான சேவை நிலைய அதிகாரிகள் குழுவொன்று யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு விஜயம் செய்து இது தொடர்பில் ஆய்வுகளை நடத்தியுள்ளது.
இதனிடையே யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் சென்னை சர்வதேச விமான நிலையம் இடையே வர்த்தக விமான சேவைகள் நவம்பர் 10 முதல் தொடங்கும் என்று இலங்கை சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் வழங்கிய குறிப்பிட்ட நேர அட்டவணையின்படி விமான சேவை தொடங்கவுள்ளது.
விமான நிலையங்களுக்கு இடையே தினசரி விமான சேவை இயக்கப்படுமெனவும் யாழ்ப்பாணம் மற்றும் சென்னை இடையே டிக்கெட் கட்டணம் இரு வழி டிக்கெட்டுக்கு ரூ .15, 690 ஆகும். சென்னை முதல் யாழ்ப்பாணம் வரை இலங்கை ரூபாயில் 7,879 ஆக இருக்கும்‘ எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கையின் உள்நாட்டு விமான நிறுவனமான ஃபிட்ஸ் ஏவியேசன் (பிரைவேட்) லிமிடெட், நவம்பர் 10 முதல் இந்தியாவில் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் மற்றும் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையம்இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை இயக்குவதாக அறிவித்துள்ளது.