Dezember 4, 2022

பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்க அமெரிக்கா இணக்கம்

 

-support-Pakistans-F16-jets-

பாகிஸ்தானுக்கு 125 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான இராணுவ உபகரணங்களை விற்பனை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கும் தனது முடிவை பென்டகன் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள எஃப் 16 ரக விமானங்களுக்கு 24 மணி நேர தொழில்நுட்பக் கண்காணிப்பு வழங்கப்படும் எனவும் கூறப்படுகின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு  உதவிகளை நிறுத்துவதற்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.

இது தற்போது அமுலில் இருந்தாலும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் ஒரு சில பாதுகாப்பு உதவிகளை மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விமானப்படை விமானங்கள் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்தியபோது அவற்றை எதிர்கொள்ள பாகிஸ்தான் எஃப் 16 ரக விமானங்களையே பயன்படுத்தியதாக கூறப்படுகின்றது. (மு)