Dezember 4, 2022

திரு சிவநாதனின் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 27.072019

 

யேர்மனி செல்ம் நகரில் வாழ்ந்து வரும்
திரு சிவநாதன் அவர்கள்  27.072018 இன்று தனது பிறந்தநாள்தனை
தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார் ,

இவரைமனைவி பிள்ளைகள் உற்றார் உறவினர் வாழ்க வாழ்க வளமாக எனவாழ்த்துகின்றார்கள் இவர்குளுடன்

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினரும்

stsstudio.com

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

STSதமிழ்Tv‌

என
இணைந்து வாழ்த்தி நிற்கின்றனர்

 

கீழ் இணைப்பில் சிவநாதன்அவர்களின் மனைவி நகுலா சிவநாதன் தன்கணவனுக்காக எழுதிய வாழ்த்துக்கவிதை இணைக்கப்பட்டுள்ளது

என்னவர்க்கு இன்று அகவை திருநாள்
எட்டுத்திக்கும் வாழ்த்து சொரிந்திடுவீர்
கட்டிய மணவாளனாய் காலமுள்ளவரை
கண்கலங்காமல் காக்கும் கடவுளவர் அவர்

என் விழியோரம் புகுந்த மன்னவா
இதயத்தில் ஈரம் சொரிந்து
இகபரசுகம் தந்த என்னவரே
இல்லறத்தை இனிப்பாக்கி
இதழோரம் புன்னகை
வீசிடச் செய்த உத்தமனே
அன்பென்ற அகல்விளக்கேற்றி
பண்பாக பாசம் பொழிந்து
துன்பங்கள் துயர் களைந்து
இன்பங்கள் இனிதே தந்திட்டு
இல்லறப்பூங்காவை நல்லறமாக்கிட்ட
நந்தவனமே! காலமுள்ளவரை
உங்கள் அன்பு வற்றாத சுரங்கம்
கடவுள் என்றும் காத்திடும் தெய்வமே!

மனைவி நகுலா சிவநாதன்