Dezember 4, 2022

யாழில் பதிவு செய்யப்படாத காணிகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள்! அவசர எச்சரிக்கை

 

வலிகாமம் தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் பதிவு செய்யப்படாத காணிகளை உடன் பதிவு செய்யுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்படாத காணிகளை அல்லது உரிமம் கோரப்படாத காணிகளை சுவீகரிக்கப் போவதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் க. தர்சன் தெரிவித்துள்ளார்.

உடுவில் உப அலுவலக எல்லைக்குட்பட்ட புகையிரத வீதிக்கு கிழக்கு பகுதியில் பதிவு செய்யப்படாது காணப்படும் காணிகள் எதிர்வரும் 3ம் திகதி பதிவு செய்யப்படவுள்ளன.

எனவே இந்தப் பகுதியிலுள்ள காணிகளின் சொந்தக்காரர்கள் அனைவரும் தங்கள் காணிகளின் உறுதி, வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களுடன், எதிர்வரும் சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் தங்களது காணிகளில் சமூகமளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பிரதேச சபையின் கோரிக்கையை உதாசீனம் செய்வோரின் காணிகள் அரசினால் சுவீகரிக்கப்படவுள்ளன.

இது தொடர்பாக மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர் உடுவில் உப அலுவலக பொறுப்பதிகாரியுடன் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ள முடியும். தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கம் 021 224 4310 என்பதாகும்.