Dezember 4, 2022

முல்லைத்தீவில் கால்பந்தாட்டத்தில் ஈடுபட்ட அமைச்சர் சஜித்!

முல்லைத்தீவு கள்ளப்பாடு உதயம் விளையாட்டு கழக மைதானத்தில் இளைஞர்களுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமான சஜித் பிரேமதாச உதைபந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டார்.

முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் உதயம் நகர் மாதிரி கிராமத்துக்குள் 25 வீடுகளும் ஆதவன் நகர் மாதிரி கிராமத்தில் 25 வீடுகளுமாக மொத்தம் ஐம்பது வீடுகள் அமைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்றையதினம் (24)அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பங்களிப்புடன் இடம்பெற்றது .

இந்த நிகழ்வுக்கு வருகைதந்த அமைச்சர் கள்ளப்பாடு உதயம் விளையாட்டுக்கழக வீரர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவர்களுடன் இணைந்து உதைபந்தாட்ட விளையாட்டில் ஈடுபட்டார்.

இறுதியாக உதயம் விளையாட்டுக்கழக இளைஞர்களின் குறை நிறைகளையும் அமைச்சர் கேட்டறிந்து கொண்டார்.