Dezember 4, 2022

15 கோரிக்கைகளுக்கான பதிலை எதிர்பார்த்து ரணிலை சந்திக்கும் முஸ்லிம் அரசியல்வாதிகள்!

பதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளனர்.

இன்றைய தினம் மாலை இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் அக்கட்சியின் அரசியல் உயர்மட்ட பீடம் நேற்று கொழும்பில் கூடி தீவிர ஆலோசனை நடத்தியது.

கல்முனை விவகாரம், அமைச்சுப் பதவிகளை மீள ஏற்பது மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறைகள் போன்ற விவகாரங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

இறுதியில் இன்றைய தினம் பிரதமரை சந்தித்து தங்களது நிலைப்பாட்டையும் ஏற்கனவே முன்வைக்கப்பட்டது.

இதில் 15 கோரிக்கைகளுக்கான பதிலையும் பெற்றுக்கொள்ளவிருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.