Dezember 4, 2022

நிலவுக்கு செல்லும் முதல் பெண்: நாசா வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு!!

2024 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி நிலையமான ”நாசா” நிலவுக்கு முதல் பெண்ணை அனுப்பவிருப்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.

நிலவில் முதன்முதலாக மனிதர்கள் காலடி எடுத்து வைத்ததன் 50 ஆவது ஆண்டை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ”நாசா” தற்போது கொண்டாடி வருகிறது. இந்நிலையில் அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் தொடர்பாக நாசா தற்போது அறிவித்துள்ளது.

குறித்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு நிலவின் இதுவரை ஆய்வு செய்யாத பகுதிகளை ஆய்வு செய்யும் முயற்சியாக, முதன் முறையாக ஒரு பெண்ணை அனுப்புவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதுடன் செவ்வாய்க் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியின் முன்னோட்டமாக இது அமையுமெனவும் நாசா தெரிவித்துள்ளது. இதை குறிப்பிடும் வகையில் இந்த திட்டத்திற்கு ”ஆர்தமிஸ்” எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நாசா அனுப்பவிருக்கும் முதல் பெண்ணுடன் மேலும் ஒரு ஆணையும் அனுப்பவிருப்பதாகவும் தெரியவருகிறது.