Dezember 5, 2022

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழிவு!

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழிவு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு வேட்பாளராக அமைச்ர் சஜித் பிரேமதாஸவின் பெயர் முன்மொழியப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.

பிரதமர் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துக் கூறிய அவர் இவ்வாறு கூறினார்.

தேர்தலுக்கு முகங்கொடுக்க கூட்டணி அமைக்க வேண்டுமா என்பது தொடர்பில் பேச்சுவார்த்தையின் போது பிரதமர் உறுப்பினர்களிடம் கேட்டதாக அவர் கூறினார்.

கட்சியில் அதிக விருப்பம் உள்ளவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யுமாறு பிரதமர் தெரிவித்ததாக ரஞ்சன் ராமநாயக்க கூறியுள்ளார்.