Dezember 4, 2022

விநாசிக்கு நல் வாழ்த்துக்கள்.

காலச் சக்கரம்
தன் பணியை சீராக
நகர்த்துகின்றது.

ஆனாலும் உன்
இளமைக் கோலம்
மாறாமலே இருக்கின்றது.

மக்களின் மனங்களில்
வாழும் பாக்கியம்
நிறைந்த மகா கலைஞன்.

உன்னோடான என்
கலைப் பயணம்
முப்பத்தைந்து வருடம்..

நெருடலில்லாத
உலக வலத்தில்
உன்னத பயணம்.

எத்தனை அரங்குகள்
எத்தனை நாடுகள்
அத்தனையும் சிறப்புக்கள்.

இரு கரங்களின்
இணைவில் ஒலி
பிறப்பது போல் நம்
இருவரின் பிணைப்போடு
ஆயிரம் அரங்குகளை
கடந்தவரானோம்…

அறுபது என்பது
ஆண்டுக் கணக்கு
மனக் கணக்கில்
உன் வயதுக்கு கணக்கேது..

உன் நேர்த்தி
சலிக்காத ஒத்திகை
உன் உயர்த்திகான
காரணங்கள்.
ஒற்றுமைக்கு
நீீ நான் மறந்த
நாமே மெய்யாகும்.

தொடரும் நம்
கலைப் பயணங்கள்.
வாழிய நண்பா வாழியவே..
பிரியமுடன்
பொன்னம் பலமெனும்
ரி.தயாநிதி..