முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கட்சியில் அமரப்போகும் செய்தியை பிரதமர் ரணில் விக்மசிங்கவிடம் சொல்லப்போவதாக சொன்ன போது முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் அல்லாஹூ அக்பர் என தக்பீர் சொல்லி ஏற்றுக்கொண்டதாக எமது புதிய குரல் கொழும்பு மத்தி செய்தியாளர் அஸ்லம் தெரிவித்தார்.

இன்று (21-07-2019) உயர்பீட கூட்டம் இடம்பெற்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது, கல்முனை விவகாரத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏமாற்று வேலை செய்துள்ளதாகவும் இதற்கு உடனடி தீர்வு இன்றேல் எதிர்க்கட்சியில் அமர்வதே சிறந்தது எனவும் குறிப்பிட்ட கூட்டத்தில் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றியுள்ளார். அத்துடன் முஸ்லிம்களுக்கான கெடுபிடிகள் தீராதவரை எந்த உறுப்பினர்களும் அமைச்சுக்களை பொறுப்பேற்பதில்லை எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.