Dezember 4, 2022

இலங்கையை காப்பாற்ற போராடும் ரணில்

இலங்கையை காப்பாற்ற போராடும் ரணில்

கடன் சுமையில் இருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான சவாலை இலங்கை எதிர்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் மூன்று மாதங்கள் கழிந்த பின்னர் நாடு ஸ்திரத்தன்மை நிலைமைக்கு திரும்பியுள்ளது. இருப்பினும் கடந்த அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெளிநாட்டு கடன் காரணமாக நாடு நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது.

ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பது தொடர்பில் சமகால அரசாங்கம் முழுமையான கவனம் செலுத்தியிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

அனைத்து சவால்களுக்கு மத்தியில் அபிவிருத்தி வேலைத்திட்டத்தையும் அரசாங்கம் காத்திரமான முறையில் முன்னெடுத்து வருவதாக அவர் கூறினார்.

பண்டுவஸ்நுவர தேர்தல் தொகுதியில் அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் பிரதமர் உரையாற்றினார்.

பண்டார கொஸ்வத்த முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் புதிய இரண்டு மாடி கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.