5ஜிக்கெதிராக மக்கள் போராட்டம்: காவல்துறையை ஏவிவிட்டு பதுங்கிய ஆனோல்ட்

 

வடதமிழீழம்: யாழ் மாநகரசபை முதல்வரால் வெளிப்படைத்தன்மையற்ற விதமாக நடைமுறைப்படுத்தப்படும் ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE) திட்டத்திற்கு எதிரான யாழ் மாநகரசபைக்குள் தற்போது போராட்டம் இடம்பெற்று வருகிறது.

மாநகரசபையின் முதல்வர் அலுவலகத்திற்கு எதிரில் ஒன்று திரண்டுள்ள போராட்டக்காரர்கள், SMART LAMP POLE என்ற பெயரில் 5ஜி தொழில்நுட்பத்தை பரிசோதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கோசங்கள் எழுப்பினர்.

அத்துடன், யாழ் முதல்வர் இ.ஆனோல்ட் தம்மை சந்திக்க வேண்டுமென்றும், திட்டம் பற்றி அவரிடம் விளக்கம் கேட்க விரும்புவதாகவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனினும், முதல்வர் போராட்டக்காரர்களின் முன் வராமல் அலுவலகத்திற்குள் முடங்கியிருக்கிறார். அத்துடன், பொலிசாரின் உதவியையும் கோரினார்.

இதையடுத்து, பொலிசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

தாயகச்செய்திகள்