பௌத்த பிக்குவின் அடாவடி! அறுத்தெறியப்பட்டன நந்திக்கொடிகள்!

முல்லைத்தீவு செம்லையில் அமைந்துள்ள நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் அலங்கரிகப்பட்ட நந்திக்கொடிகள் அறுத்தெறியப்பட்டுள்ளன. அத்துடன் அங்க நாட்டப்பட்ட நந்திக்கொடிக் கம்பங்களும் பிடுங்கி எடுக்கப்பட்டுள்ளன.

செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் நிலத்தினை ஆக்கிமிரமித்து விகாரை கட்டும் பௌத்த பிக்குவால் இக்கொடிகள் அகற்றப்பட்பட்டுள்ளன.

கடந்த 11 நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற பொங்கல் விழாவுக்காக இக்கொடிகள் அலங்கரிக்கப்பட்ட நந்திக்கொடிகளே நேற்று செவ்வாயக்கிழமை பௌத்த பிக்குவால் அறுத்தெறியப்பட்டுள்ளன.

பௌத்த பிக்குவின் அடாவடித்தனத்திற்கு எதிராக ஆலய நிர்வாகத்தினால் இன்று புதன்கிழமை முல்லைத்தீவு காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாயகச்செய்திகள்