உண்மையிலேயே உலகக் கோப்பை இந்த அணிக்கு தான் சொந்தம் மூத்த இலங்கை வீரர் ஒரே போடு இங்கிலாந்து-நியூசிலாந்து இடையே நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நடந்த சர்ச்சைகள் தொடர்பாக இலங்கை சுழற்பந்து ஜம்பவாம் முத்தையா முரளிதரன் கருத்து தெரவித்துள்ளார்.

இதுகுறித்து பேட்டி அளித்த இலங்கை ஜம்பவான் முத்தையா முரளிதரன் கூறியதாவது, இரு அணியினருக்கும் சம்பியன் பட்டத்தை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என நினைக்கிறேன், ஏனெனில் உண்மையில் இரண்டு அணிகளுமே கடுமையாக போராடினார்கள். இரு அணியினருமே சிறப்பாக விளையாடினார்கள், ஆனால, இறுதியில் வெற்றி இலக்கை யாரும் பெறவில்லை.

அன்றைய தினம் யார் சிறந்தவர் என்பதை மட்டும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும், அன்று இரு அணிகளும் சிறப்பாக விளையாடினர்கள், அதானல், உலகக் கோப்பை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும்.

இல்லையெனில் வெற்றியாளரை தேர்வு செய்ய வேறு வழி இருக்கிறது என்பதை ஆய்வு செய்திருக்க வேண்டும். களதடுப்பு வீரர் வீசிய பந்து துடுப்பாட்டகாரர் மட்டையில் பட்டு பவுண்டரிக்கு சென்ற விதி மாற்றப்பட வேண்டும் என முரளிதரம் வலியுறுத்தியுள்ளார்.