சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சோபா உடன்பாடு கையெழுத்திடப்படவில்லை என்று, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சட்டவாளர் சங்கத்துடன் நேற்று நடத்திய சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமெரிக்காவுடன் சோபா உடன்பாடு மற்றும் ஏனைய உடன்பாடுகள் குறித்த பேச்சுக்கள் தொடர்பாக, சிறிலங்கா பிரதமரிடம் சட்டவாளர் சங்கம் விளக்கம் கோரியிருந்தது.
இந்தப் பேச்சுக்களில் அமைச்சர்கள் திலக் மாரப்பன, தலதா அத்துகோரள ஆகியோரும் கலந்து கொண்டனர்.