November 27, 2022

பிரான்ஸ் நாட்டில் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது

பிரான்ஸ் நாட்டில் தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.இந்த
நிகழ்வில் எந்திரத்தின் உதவியுடன் அந்தரத்தில் பறந்து ராணுவ வீரர் சாகசம் செய்தார்.பிரெஞ்சுப் புரட்சியின் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் 1789ஆம் ஆண்டு பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்ட தினம் பிரான்சில் தேசிய தினமாக கொண்டாடப்படுகிறது.இந்த தினத்தையொட்டி பாரிசின் சாம்ப்ஸ் எலிசீஸ் பகுதியில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்று ராணுவ அணிவகுப்பை கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 300 ராணுவ வீரர்களும் 200 ராணுவ வாகனங்கள் மற்றும் 100 விமானங்கள் அணிவகுப்பில் ஈடுபட்டன. இவற்றுள் மற்ற ஐரோப்பிய நாடுகளின் அணிவகுப்பும் அடங்கும்.இதில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் ராணுவ வீரர் ஒருவர் எனப்படும் செயற்கை இறக்கை பொருத்தி வானில் பறந்து சாகசத்தில் ஈடுபட்டது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஈஃபில் டவரில் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைப்பெற்றது.