Dezember 4, 2022

ஈழத் தமிழர் திருநாட்டின் மேன்மைமிகு பண்பாட்டைப் பிரதிபலிக்கும்ஆடிப்பிறப்பு பண்பாட்டு விழா இனிதே நடைபெற்றிருந்தது.

இன்று 17.07.2019 புதன் கிழமை முற்பகல் 10.30 மணிக்கு வேலணை பிரதேச செயலக விழா மண்டபத்தில் தமிழர் தம் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் முகமாக முன்னோர்கள் கொண்டாடி மகிழ்ந்த ஆடிப்பிறப்பு பண்பாட்டு விழாவானது வடக்கு மாகாணத்தின் திட்டமிடலுக்கு ஏற்ப வேலணை பிரதேச செயலகத்தாலும், வேலணை கலாச்சாரப் பேரவையாலும் மிகவும் சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்றிருந்தது.

இதன்போது எமது பண்பாட்டைப் பிரதிபலிக்கும் பல்வேறுபட்ட கலை நிகழ்வுகளும் அரங்கேறின. அவ்வகையில் ஆடிப்பிறப்பின் சிறப்புக் கூறும் சிறப்புக் கவிதையும் என்னால் வாசிக்கப்பட்டது.