Dezember 4, 2022

கொழும்பு – வெளிச்சுற்று அதிவேக வீதியின் மூன்றாம் கட்டம் நிறைவடையவுள்ளது

தற்போது அமைக்கப்பட்டு வரும், கொழும்பு – வெளிச்சுற்று அதிவேக வீதியின் மூன்றாம் கட்டம், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் நிறைவடையவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

கொழும்பு – வெளிச்சுற்று அதிவேக வீதியின் மூன்றாம் கட்டத்திற்கான ஆரம்பப்பணிகள் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியன்று முன்னெடுக்கப்பட்டன.

குறித்த அதிவேக வீதியின் மூன்றாம் கட்டமானது 9 தசம் 6 கிலோமீற்றர் தூரத்தினை உள்ளடக்கியுள்ளது.

கடவத்தையில் ஆரம்பிக்கும் இந்த, அதிவேக வீதியின் மூன்றாம் கட்டம் கெரவலப்பிட்டிய வரை அமைக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,